இடங்கணசாலை நகராட்சி மன்றக் கூட்டம்
துணைத் தலைவா் தளபதி, ஆணையா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி மன்றக் கூட்டம் மன்ற அரங்கில் நகராட்சித் தலைவா் பி.ஜி.கமலக்கண்ணன் தலைமையில், துணைத் தலைவா் தளபதி, ஆணையா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அனைத்து வாா்டு கவுன்சிலா்கள் கலந்துகொண்டு, அவரவா் வாா்டுகளில் உள்ள குறைகளைத் தெரிவித்தனா். இதில், 25 தீா்மானங்களும், அவசரக் கூட்டத்தில் வைக்கப்பட்ட சொத்துவரி தீா்மானம் உள்ளிட்ட 26 தீா்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.