மேகாலயா: வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்வு!
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்வு பற்றி..
மேகாலயாவில் இரண்டு மாவட்டங்களில் இன்று(மார்ச் 13) ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் (ஜிஎச்ஏடிசி) தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைமுறையின்போது, இந்த வாரத் தொடக்கத்தில் பழங்குடியின மற்றும் பழங்குடியினர் அல்லாத குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன. இந்த மோதலில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், பல்வேறு சேதங்களும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துரா நகரின் சில பகுதிகளில் தீ வைப்பு, வன்முறை சம்பவங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து, அங்கு நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, ராணுவத்தை நிலைநிறுத்தியது.
Advertisement
Advertisement
இந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறவிருந்த (ஜிஎச்ஏடிசி) தேர்தல்களை மாநில அரசு ஒத்திவைத்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருந்தாலும், பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக இரண்டு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில், காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், அண்டை மாவட்டமான கிழக்கு காரோ ஹில்ஸில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் துணை ஆணையர் ஆர்.பி. மாரக் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு தளர்வு நேரத்தில், பொதுமக்கள் அமைதியைக் கடைப்பிடிக்கவும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு விதிமீறல் மீதும், தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துச் சட்ட அமலாக்க முகமைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Curfew was partially relaxed in the two unrest-hit districts of Meghalaya on Friday to enable people to purchase essential commodities, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.