நாசிக்கில் அடுத்தடுத்து 4 நில அதிர்வுகள்!
நாசிக் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட 4 நில அதிர்வுகள் பற்றி...
நாசிக் மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் நான்கு நில அதிர்வுகள் சனிக்கிழமை பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுர்கானா தாலுகாவின் போர்கான் பகுதியில் இந்த அதிர்வுகள் உணரப்பட்டதாக அவர்கள் கூறினர்.
காலை 9.55 மணிக்குத் தொடங்கி சுமார் 50 நிமிட இடைவெளியில் ரிக்டர் அளவில் 3.6 வரையிலான 4 நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
அதேசமயம் இப்பகுதியில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 164.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இப்பகுதிக்கான வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிப்பார் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கிடையில், மாவட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது.
கங்காபூர் அணையிலிருந்து கோதாவரி ஆற்றுக்கு நீர் வெளியேற்றப்படுவது குறைந்திருந்தாலும், தொடர்ந்து அந்த பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கௌதமி-கோதாவரி அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுவது அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறினர்.
Four tremors measuring up to 3.6 magnitude were recorded in Maharashtra's Nashik district on Saturday, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.