FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அடுத்தடுத்து அதிர்ந்த லடாக்! 4 மணி நேரத்தில் 2 நிலநடுக்கங்கள்!

லடாக்கை அதிர வைத்த நிலநடுக்கங்கள் பற்றி..

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 12:25 pm IST
நிலநடுக்கம் (கோப்புப்படம்) - DIN
பகிர்:

யூனியன் பிரதேசமான லடாக்கில் சுமார் நான்கு மணி நேரத்தில் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி,

முதல் நிலநடுக்கம் இன்று காலை 6.05-க்கு ஏற்பட்டது. இதன் மையப்புள்ளி அட்சரேகை 36.88 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 74.402 டிகிரியில் அமைந்திருந்தது. இது லடாக்கின் லே பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அடுத்ததாக 4.3 ரிக்டர் அளவு கொண்ட மற்றொரு நிலநடுக்கம் காலை 9.54 மணிக்கு, வட அட்சரேகை 36.76 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 75.326 டிகிரி என்ற இடத்தில், லே பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் கூறியது.

இரண்டு நிலநடுக்கங்களும் சுமார் நான்கு மணி நேர இடைவெளியில் லே பிராந்தியத்தில் பதிவாகின. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, சொத்து சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

நில அதிர்வு அபாயம் அதிகம் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ள இப்பகுதியில், அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின.

Two earthquakes of moderate magnitude jolted the Union Territory of Ladakh within a span of nearly four hours on Thursday, triggering fear among residents.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments