FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவு

இந்தோனேசியாவில் சனிக்கிழமை அதிகாலையில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் குறித்து...

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 10:21 am IST
தாஜிகிஸ்தானில் நிலநடுக்கம் - பிரதிப் படம்
பகிர்:

ஜகார்தா: இந்தோனேசியாவில் சனிக்கிழமை அதிகாலையில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 49 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக என்சிஎஸ் தனது 'எக்ஸ்' பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3.28 மணியளவில் பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள உயிா்ச் சேதமோ, பொருள் சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தோனேசியா, புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

பொதுவாக, ஆழமான நிலநடுக்கங்களை விட மேலோட்டமான நிலநடுக்கங்கள் அதிக ஆபத்தானவை. ஏனெனில், மேலோட்டமான நிலநடுக்கங்களின்போது உருவாகும் நில அதிர்வு அலைகள் புவி மேற்பரப்பை அடையக் குறைந்த தூரத்தையே கடக்க வேண்டியுள்ளது; இதனால் தரைப்பகுதி வலுவாக அதிர்வதோடு, கட்டடங்களுக்கு அதிக சேதமும், அதிக அளவிலான உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

summary

A massive earthquake of magnitude 7.4 jolted Indonesia early on Saturday, according to the National Centre for Seismology

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments