ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவானது பற்றி...
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் சனிக்கிழமை 11 மணி நேர இடைவெளியில், ரிக்டர் அளவில் 2.9 முதல் 3.9 வரை பதிவான நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நான்கு நிலநடுக்கங்களில், மூன்று ஜம்மு-காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்குப் பகுதியிலும், ஒன்று லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியிலும் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதலில், அதிகாலை 2.38 மணியளவில் கிஷ்த்வார் மாவட்டத்தில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையம் பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது.
தொடர்ந்து, காலை 8.48 மணியளவில் தோடா மாவட்டத்தில் 3.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையம் 5 கி.மீ. ஆழத்தில் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, லடாக்கின் லே பகுதியில் காலை 10.29 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர், பிற்பகல் 1.09 மணியளவில் தோடாவில் 2.9 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் பதிவானது.