FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தென் பசிபிக் பெருங்கடல் வனுவாட்டு தீவுகள் பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவுகள் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து...

தென் பசிபிக் பெருங்கடல் வனுவாட்டு தீவுகள் பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கோப்புப்படம்
பகிர்:

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவுகள் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவானதைத் தொடர்ந்து தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், வனுவாட்டு தீவுகள் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவானது. அதே பகுதியில் 25 வினாடிகள் இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகுகளான இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகுகளாக பதிவானது. பூமிக்கு அடியில் 10.கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

Advertisement

Advertisement

முதல் நிலநடுக்கத்தின் மையமானது வனுவாட்டு சோலை நகருக்கு மேற்கே 200 கி.மீ. தொலைவிலும், 10. கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இரண்டாவது நிலநடுக்கத்தின் மையமானது போர்ட்-ஓல்ரி நகருக்கு மேற்கு-வடமேற்கே 197 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்க மையத்திலிருந்து 300 கி.மீ. தொலைவிற்குள் உள்ள கடற்கரைப் பகுதிகளில் அபாயகரமான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

A tsunami warning has been issued after a magnitude 7.2 earthquake struck off Vanuatu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments