FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் லேசான நில அதிர்வுகள்: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்

நாசிக் மாவட்டத்தில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டது பற்றி...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 11:53 am IST
நில அதிர்வு
பகிர்:

மகாராஷ்டிரத்தில் நில அதிர்வுகள் காரணமாக வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் லேசான நில அதிர்வைத் தொடர்ந்து சில பகுதிகளில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நாசிக்கில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5.33 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவானது.

Advertisement

Advertisement

மகாராஷ்டிரா-குஜராத் எல்லைக்கு அருகில் உள்ள ஹட்காட் மலைத்தொடரையொட்டிய பன்வாட் பகுதியில், பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் அமைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாசிக் நகரம் மற்றும் சுர்கானா, கல்வான், தேவலா, சந்தவாட், பேத், திண்டோரி, நிபாட் ஆகிய தாலுகாக்களின் சில இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால், பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

சுர்கானா தாலுகாவில் உள்ள பாதர் மற்றும் திண்டோரி தாலுகாவில் உள்ள நானாஷி ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிர்ஷ்டவசமாக இதில் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. அப்பகுதியில் உள்ள அணைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அவற்றில் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை.

"பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். இருப்பினும், அனைவரும் விழிப்புடன் இருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, ஜூலை 25 முதல் 28 வரையிலும், ஆகஸ்ட் 6 ஆம் தேதியும் இம்மாவட்டத்தில் நில அதிர்வுகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

A mild earthquake followed by tremors hit Maharashtra's Nashik, causing cracks in houses in some areas of the district, officials said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments