FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மகாராஷ்டிரத்தில் 2 முறை நில அதிர்வு! பீதியில் மக்கள்!

மகாராஷ்டிரத்தில் 2 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பற்றி...

மகாராஷ்டிரத்தில் 2 முறை நில அதிர்வு... - NCS
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று காலை 2 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை 7.46 மணியளவில் ஹிங்கோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆகப் பதிவாகியுள்ளது. இது அவுந்தா நாகநாத் தாலுகாவில் உள்ள கதாலா என்ற கிராமத்தில் 7 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக மாவட்ட மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, சில மணி நேர இடைவெளி விட்டு காலை 9.43 மணி அளவில் 4.5 என்ற அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது பர்பானி பகுதியில் இருந்து 16 கிமீ தொலைவில் உணரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் இல்லை.

summary

4.5-Magnitude Earthquake Jolts Maharashtra Hingoli

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments