FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் நிலையத்தில் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணப் பையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!

கந்தர்வகோட்டையில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணப் பையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள் குறித்து..

Updated On : 13 மார்ச் 2026, 1:06 pm IST
கந்தர்வகோட்டை அருகே வியாழக்கிழமை நள்ளிரவு கொள்ளை நடந்த பெட்ரோல் விற்பனை நிலையம். - டிஎன்எஸ்
பகிர்:

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே வியாழக்கிழமை இரவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணப் பையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் , வேம்பன்பட்டி கிராமத்தில் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் ஒரத்தநாட்டைச்சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்கி வருகின்றது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சொக்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பெரமையன் மகன் பாண்டியன்(50), பணிபுரிந்து வருகின்றார். ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அதிகயளவு விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு 2.30 மணியளவில் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்து வந்த மூன்று பேர், அங்கிருந்த ஊழியர் பாண்டியனை அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி பாண்டியனிடம் இருந்த பணப்பையை பரித்துள்ளனர். பாண்டியன் கூச்சலிட்டதால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஓடிவந்துள்ளனர். மக்கள் ஓடிவருவதை பார்த்த முகமூடி கொள்ளையர்கள் பாண்டியனின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு பணப்பையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் வனிதா மற்றும் போலீசார், காயமடைந்த பாண்டியனை மீட்டு கந்தர்வகோட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தப்பிச் சென்ற முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் பறித்துச் சென்ற பணப்பையில் சுமார் ரூ. 25 ஆயிரம் இருந்ததாக பாண்டியன் தெரிவித்துள்ளார். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் கைரேகைகளை சேகரித்து வருகின்றனர்.

summary

Masked robbers slashed a petrol station employee with a machete and stole his wallet...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments