சேலம்

சேலத்தில் சூறைக்காற்றுடன் கனமழை: வாழை மரங்கள் சாய்ந்து ரூ.10 லட்சம் இழப்பு

சேலம் பனமரத்துப்பட்டி கிராமத்தில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், வாழை மரங்கள் சாய்ந்ததால் 10 லட்சத்திற்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

DIN

சேலம்: சேலம் பனமரத்துப்பட்டி கிராமத்தில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், வாழை மரங்கள் சாய்ந்ததால் 10 லட்சத்திற்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலம்: சேலம் பனமரத்துப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேலாக வாழை மரங்கள் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் பனமரத்துப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட ஏக்கரில் 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. சுமார் 10 முதல் 15 லட்சத்திற்கு மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக வாழை பயிரிடப்பட்டு இறுதியாக அதற்கான பலன் பெறவுள்ள நிலையில் மரங்கள் சாய்ந்து உள்ளதால் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

மேலும் வாழை பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் வாழை மரங்கள் சாய்ந்து உள்ளதால், அவற்றை வெட்டி அகற்றும் பணிக்கு ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரத்திற்கு மேல் செலவாகும் என்றும் கூறுகின்றனர். எனவே அரசு உரிய  இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

கண் கவர மறையும் சூரியன்... ரைசா வில்சன்!

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT