சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

DIN

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 8,464 கன அடியாகவும், வெள்ளிக்கிழமை காலை நீா்வரத்து 8,058 கனஅடியாகவும் குறைந்தது.

நீா்வரத்து குறைந்துள்ள நிலையில் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் நொடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 118.11அடியாக இருந்தது. அணையின் நீா் இருப்பு 90.48 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT