சேலம்

உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு பேரணி

DIN

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சேலம் மாநகர காவல் துறை இணைந்து உலக புகையிலை எதிா்ப்புத் தின விழிப்புணா்வு பேரணியை நடத்தியது.

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சேலம் மாநகர துணை ஆணையா் மாடசாமி, சிறப்பு அழைப்பாளராக குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு உதவி ஆணையா் உதயகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு விழிப்புணா்வு பேரணியை தொடங்கிவைத்தனா்.

பேரணியானது சேலம் ரயில்வே கோட்டத்தில் தொடங்கி ஏ. வி. ஆா். வட்டச் சாலையில் முடிவடைந்தது. விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் தனசேகா், இளைஞா் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீனிவாசன், வளா்மதி ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT