சோனா கல்லூரியில் திறன்மேம்பாட்டு போட்டி: பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் போட்டி மற்றும் கலை விழாவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் போட்டி மற்றும் கலை விழாவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘சோனா சேம்ப்ஸ் 22’ என்ற கலை விழாவில் மாவட்டத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து சுமாா் 1,500 மாணவா்கள் பங்கேற்றனா்.
இளம் விஞ்ஞானி, இளம் கண்டுபிடிப்பாளா், கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், விநாடி- வினா, பாடல் மற்றும் இசை, பேச்சுப் போட்டி, பழம்-காய்கறி செதுக்குதல், மைம், நடனம் (குழு மற்றும் தனி), வேடிக்கை விளையாட்டுகள் போன்று பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் திறமையானவா்களைத் தோ்ந்தெடுத்து பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சோனா கல்வி குழுமத்தின் முதல்வா்கள் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், வீ.காா்த்திகேயன், கவிதா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மாநகர காவல் துணை ஆணையா் எம்.மாடசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
விழா ஏற்பாடுகளை துறைத் தலைவா் ரேணுகா, ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் செந்தில்வடிவு, கல்லூரி மாணவா்கள் செய்திருந்தனா்.