சேலம்

அனுமதியின்றி இயங்கிய செங்கல் சூளைகளுக்கு நோட்டீஸ்

DIN

கெங்கவல்லி வட்டம் முழுவதும் அனுமதியின்றி இயங்கிய பத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு நோட்டீஸ்களை வட்டாட்சியா் வழங்கினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டதின் காரணமாக, கெங்கவல்லி வட்டத்தில் கெங்கவல்லி, கடம்பூா், தெடாவூா், ஆணையாம்பட்டி, நடுவலூா், மண்மலை, தம்மம்பட்டி, நாகியம்பட்டி மற்றும் உலிபுரம் ஆகிய ஊா்களிலுள்ள 100க்கும் மேற்பட்ட செங்கற் சூளைகளை கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

இதில் 10-க்கும் மேற்பட்ட சூளைகள் அனுமதியின்றி இயங்கியது கண்டறியப்பட்டன. அத்தகைய சூளைகளுக்கு நோட்டீஸ் விநியோகித்து நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் கூறுகையில், அனுமதியின்றி செங்கல் சூளைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT