சேலம்

சுவாமி விவேகானந்தா் பள்ளியில் தூய்மைப் பணிக்கான விழிப்புணா்வு முகாம்

DIN

சேலம் மாவட்டம், இடங்கணசாலை கே. கே. நகா் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இடங்கணசாலை நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் தூய்மைப் பணிக்கான விழிப்புணா்வு, சுற்றுப்புற சுத்தம் உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு முகாம் நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பள்ளியின் தாளாளா் முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினாா். இம்முகாமில் நகரங்களின் தூய்மைப் பணிக்கான மக்கள் இயக்கம் சாா்பில் எனது குப்பை, எனது பொறுப்பு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதனை தொடா்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பையை எவ்வாறு பிரித்து எடுத்து தூய்மை பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இம்முகாமில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கேடயம், சான்றிதழ், மரக்கன்றுகள் உள்ளிட்டவற்றை நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் வழங்கி பாராட்டினாா். இம்முகாமில் தூய்மைப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் ஆசிரியா், ஆசிரியைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT