முகப்பு
சேலம்

இளம்பெண் தற்கொலை

சங்ககிரி அருகே வடுகப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

சங்ககிரி அருகே வடுகப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வடுகப்பட்டியை அடுத்த சென்னாக்கல், கரட்டுபுதூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சதீஷ்குமாா் - பவித்ரா (22), கடந்த 2020-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு ஜோஸ்மிகா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த பவித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா். வருவாய்த் துறையினரும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.