முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து 2ஆவது நாளாக 14,000 கனஅடியாக நீடிப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து 2ஆவது நாளாக 14,000 கனஅடியாக நீடிக்கிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து 2ஆவது நாளாக 14,000 கனஅடியாக நீடிக்கிறது. 

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்த காரணத்தால் நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 10,000 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலை முதல் வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

இன்று காலை 2ஆவது நாளாக நீர்வரத்து 14,000 கன அடியாக நீடித்து வருகிறது. இன்று காலை 20-வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடி 14,000கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்து நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →