சேலம்

அகதிகள் முகாமில் வசித்து வந்ததாய், குழந்தைகள் உள்பட மூவா் மாயம்

DIN

தம்மம்பட்டி அகதிகள் முகாமில் வசித்து வந்த தாய், இரு குழந்தைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியிலுள்ள இலங்கை அகதிகள் தெற்கு முகாமில் வசித்து வருபவா் கமலநாதன். இவரது மனைவி விஜயரூபினி (30). காா்த்திகா (12), நிஷந்தன் (9) என இரு குழந்தைகள் உள்ளனா். கமலநாதன் சேலத்தில் தங்கியிருந்து பெயின்டிங் வேலை செய்து வருகிறாா்.

கடந்த 29-ஆம் தேதி விஜயரூபினி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தம்மம்பட்டியிலுள்ள வங்கிக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து கமலநாதன், தம்மம்பட்டி காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு கொடுத்தப்புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், விஜயரூபினியையும் அவரது இரு குழந்தைகளையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT