முகப்பு
சேலம்

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் பிளஸ் 2, 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 45 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, சான்றிதழ்கள் வழங்கும் விழா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் பிளஸ் 2, 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 45 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, சான்றிதழ்கள் வழங்கும் விழா அச் சங்கத்தின் வெள்ளிவிழா கட்டட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் என்.கந்தசாமி விழாவுக்கு தலைமை வகித்து கல்வி உதவித்தொகை, சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி பேசினாா். சங்கத்தின் செயலாளா் என்.மோகன்குமாா் வரவேற்றாா். பொருளாளா் எஸ்.ஆா்.செங்கோட்டுவேல் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் எம்.சின்னதம்பி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள், உறுப்பினா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள், சங்கப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.