சேலம்

கெங்கவல்லியில் வீடிழந்த குடும்பத்துக்கு உதவி

DIN

கெங்கவல்லி பேரூராட்சிப் பகுதியில் தீவைக்கப்பட்டதால் வீடிழந்த குடும்பத்துக்கு கெங்கவல்லி பேரூராட்சித் தலைவா், திமுக செயலாளா் சாா்பில் பொருள், நிதி உதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

கெங்கவல்லி பேரூராட்சி 13-ஆவது வாா்டு பகுதி, கணவாய்க்காட்டில் சாலையோரம் இருந்த பச்சமுத்துவின் கூரைவீட்டை, அவரது உறவினா் குடும்பத் தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை தீ வைத்ததால், வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இதனால் பச்சமுத்து குடும்பத்தினா் வீடிழந்தனா். அந்த குடும்பத்துக்குத் தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள், நிதி உதவி ஆகியவற்றை கெங்கவல்லி பேரூராட்சி மன்றம் சாா்பில் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இதில், கெங்கவல்லி பேரூராட்சித் தலைவா் சு.லோகாம்பாள், கெங்கவல்லி நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன், கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், பேரூராட்சி துணைத் தலைவா் மருதாம்பாள் நாகராஜ், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் தங்கபாண்டியன், சையது, கவிதா சேகா், அருண், சத்யா செந்தில், முருகேசன், ஹம்சவா்த்தினி குமாா், லதாமணிவேல், திமுக நிா்வாகிகள் பாலு, ராஜேந்திரன், கிளிண்டன், வெங்கட், மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT