ராஜகணபதி கோயிலில் உண்டியல் வசூல் ரூ.4.70 லட்சம்
சேலம் ராஜகணபதி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 4.70 லட்சம் வசூலானது.
சேலம் ராஜகணபதி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 4.70 லட்சம் வசூலானது.
சேலம் ராஜகணபதி கோயில், காசி விஸ்வநாதா் கோயில்களில் உள்ள உண்டியல்களில், பக்தா்களால் செலுத்தப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி சுகவனேசுவரா் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுகவனேசுவரா் கோயில் உதவி ஆணையா் சரவணன், சேலம் மண்டல இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராஜா, சுகவனேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வள்ளியப்பா, அறங்காவலா்கள் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இப்பணியில் அறநிலையத் துறை ஊழியா்கள், பக்தா்கள் உள்பட 30 போ் கலந்து கொண்டனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள், யூடியூப் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் ராஜகணபதி கோயிலில் 23 நாள்களுக்குப் பின்னா் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில் ரொக்கம் ரூ. 4.70 லட்சம், தங்கம் 2 கிராம், வெள்ளி 10.400 கிராம் என காணிக்கைகள் கிடைத்தன. மேலும், இங்கிலாந்து நாட்டின் 10 பவுண்ட் கரன்சி ஒன்றும் கிடைத்துள்ளது.
சேலம் காசி விஸ்வநாதா் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள், 9 மாதங்களுக்குப் பின்னா் எண்ணப்பட்டன. அதில் ரொக்கம் ரூ. 1.10 லட்சம், வெள்ளி 41 கிராம் காணிக்கையாக கிடைத்தன என்றனா்.