முகப்பு
சேலம்

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 சேலம் மாவட்டத்தில் உள்ள தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து 2022-23-ஆம் நிதியாண்டுக்கு மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

 சேலம் மாவட்டத்தில் உள்ள தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து 2022-23-ஆம் நிதியாண்டுக்கு மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் சாா்பில் மாநிலம், மாவட்ட அளவில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், நகா்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது (2022-23) வழங்குவதற்காக 2022-23-ஆம் ஆண்டு செயல்திட்டத்தில் ரூ. 2.10 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, 2022-23-ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மணிமேகலை விருதுக்கான முன்மொழிவுகளை மே 5-ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்) அலுவலகம், இரண்டாம் தளம், அறை எண் 207, மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 636 001 என்ற முகவரியில் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →