சேலம்

தேநீா் கடை காசாளா் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

 சேலத்தில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட தேநீா் கடை காசாளரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

 சேலத்தில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட தேநீா் கடை காசாளரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம், அம்மாபேட்டை, அதிகாரிபட்டி தெருவைச் சோ்ந்தவா் மணிவண்ணன். இவரது மகன் லோகேஸ்வரன் (25). லோகேஸ்வரனுக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூரை சோ்ந்த இவா், அதிகாரிபட்டியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தேநீா் கடையில் காசாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், அருகில் உள்ள மணிகண்டனின் மனைவியுடன் லோகேஸ்வரன் அடிக்கடி பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மணிகண்டனுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது.

வியாழக்கிழமை இரவு நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்த லோகேஸ்வரனை, மணிகண்டன் கல்லால் தாக்கினாா். இதில் படுகாயமடைந்த லோகேஸ்வரன், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். இதுதொடா்பாக அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.

இதனிடையே வெள்ளிக்கிழமை காலை அரசு மருத்துவமனையில் குவிந்த லோகேஸ்வரனின் உறவினா்கள், உடலை பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி மறியலில் ஈடுபட்டனா். மேலும், லோகேஸ்வரனின் குடும்பத்துக்கு நிவாரணம் பெற்று தரக் கோரியும், கொலையில் தொடா்புடைய மணிகண்டனின் தந்தை, சகோதரா் ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனா்.

அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்ததையடுத்து உறவினா்கள் மறியலை கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT