சேலம்

வாழப்பாடி: மக்கள் நல்வாழ்வு பெற கைம்பெண்களுக்கு பாத பூஜை!

வாழப்பாடி அருகே வறட்சி நீங்கி, மழை பொழிந்து மக்கள் நல்வாழ்வு பெற வேண்டி, வயதில் மூத்த கைம்பெண்களுக்கு பாத பூஜை செய்து, அம்மனுக்கு கூழ் ஊற்றியும் கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வறட்சி நீங்கி, மழை பொழிந்து மக்கள் நல்வாழ்வு பெற வேண்டி, வயதில் மூத்த கைம்பெண்களுக்கு பாத பூஜை செய்து, அம்மனுக்கு கூழ் ஊற்றியும் கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இன்றளவிலும் முன்னோர்கள் வழியில் மரபு மாறாமல், பல வினோத வழிபாட்டு முறைகளை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, வறட்சி நிலவும் தருணத்தில் காவல் தெய்வங்களுக்கு ஆடு, கோழி, பன்றி பலியிட்டு முப்பூஜை வழிபாடு நடத்துதல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், வயதில் மூத்த கைம்பெண்களுக்கு பாத பூஜை செய்து வழிபாடு நடத்துதல், கிராமத்தின் எல்லை சாமிக்கு பன்றி பலி கொடுத்தல் போன்ற வினோத வழிபாடுகளை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த வரிசையில்,  வாழப்பாடி புதுப்பாளையம் கிராமத்தில் நேற்று ஆடி பௌர்ணமியையொட்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

அப்போது, வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டியும், மக்கள் நல்வாழ்வுக்கு வழிவகுக்க வேண்டியும்,  வயதில் மூத்த கைம்பெண்களை வரவழைத்து, சுமங்கலி பெண்கள் பாத பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வு அப்பகுதியில் கூடியிருந்த பக்தர்களுடைய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சிறப்பு பூஜை வழிபாட்டினால், இப்பகுதியில் நல்ல மழை பெய்து வறட்சி நீங்குமென நம்பிக்கை தொடர்ந்து வருவதாக,  அந்த ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT