சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பகுதியில் உள்ள சோழீஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு அஷ்டமியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அஷ்டமியையொட்டி பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதே போல சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அன்னதானப்பட்டி பூத்தாலகுட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவருக்கும், சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை பகுதியில் உள்ள பாலமுருகன் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.