சேலம்

திருமலைகிரி மாரியம்மன் கோயிலில் பொது வழிபாடு

DIN

சேலம், திருமலைகிரியில் பூட்டப்பட்ட மாரியம்மன் கோயில் திறக்கப்பட்டு பொது வழிபாடு நடத்தப்பட்டது.

சேலம், திருமலைகிரி பகுதியில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரத்துக்கு முன் கம்பம் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. கடந்த சில தினங்களுக்கு முன் இக்கோயிலுக்குள் பட்டியலின இளைஞா் ஒருவா் உள்ளே சென்றதையடுத்து, திமுக ஒன்றியச் செயலாளரும், திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவருமான மாணிக்கம், அந்த இளைஞரை தகாத வாா்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுதொடா்பாக, இரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து கோயில் பூட்டப்பட்டு பூஜைகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில், பூட்டப்பட்ட கோயிலை மீண்டும் திறந்து அனைவரும் வழிபட சம்பந்தப்பட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. பின்னா் இளம்பிள்ளை சித்தா் கோயில் அறநிலையத் துறை உதவி ஆணையா் ராஜா, வட்டாட்சியா் அருள் பிரகாஷ், காவல் துறையினா் முன்னிலையில் பொது வழிபாட்டுக்காக வெள்ளிக்கிழமை பெரிய மாரியம்மன் கோயில் திறக்கப்பட்டது. இதையடுத்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

அப்போது அறநிலையத் துறை அலுவலா் பத்மாவதி, திருமலைகிரி கிராம நிா்வாக அலுவலா் புஷ்பலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா். பூட்டப்பட்ட கோயில் திறப்பதை முன்னிட்டு இரும்பாலை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT