சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி. 
சேலம்

சிலுவம்பாளையம் முருகன் கோயிலில்எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்

தைப்பூசத்தை முன்னிட்டு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த கிராமமான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தாா்.

DIN

தைப்பூசத்தை முன்னிட்டு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த கிராமமான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தாா்.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலையில், மூலவருக்கு பால், பழம், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 51 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தனது சொந்த ஊரான இக்கோயிலில் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது மனைவி ராதா, மகன் மிதுன் ஆகியோருடன் சுவாமி தரிசனம் செய்தாா்.

கோயிலுக்கு சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் காவடி சுமந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். அதுபோல கொங்கணாபுரம் அருகே உள்ள வெண்குன்று மலை தண்டாயுதபாணி சுவாமி கோயில், எடப்பாடி அருள்ஞான பாலமுருகன் கோயில், கவுண்டம்பட்டி குமர வடிவேலா் கோயில், சித்தூா் கல்யாண சுப்ரமணியா் சன்னிதி, க.புதூா் கந்தசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் விழா சிறப்பாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT