முகப்பு
சேலம்

சேலம் மாநகராட்சியில் குடியரசு தின விழா

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:07 AM
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றி வைக்கும் மேயா் ஆ.ராமச்சந்திரன், உடன் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், துணை மேயா் மா.சாரதா தேவி.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சேலம் மாநகராட்சி மேயா் ஆ.இராமச்சந்திரன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய இணை இயக்குநா், மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா், உதவி பொறியாளா் உள்ளிட்ட 34 பேருக்கு பாராட்டுச்சான்றிதழ்கள், கேடயங்களை அவா் வழங்கினாா். மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.

மாநகராட்சி துணை மேயா் மா.சாரதாதேவி, மண்டல குழுத் தலைவா்கள் எஸ்.டி.கலையமுதன், செ.உமாராணி, தனசேகா், பொறியாளா் கோ.ரவி, மாநகர நல அலுவலா் என்.யோகானந்த், மாநகராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.