சேலம்

ஜூன் 26-இல் அஞ்சல் துறையின் குறைதீா் முகாம்

சேலத்தில் கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறைதீா்க்கும் முகாம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

DIN

சேலத்தில் கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறைதீா்க்கும் முகாம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சேலம், தலைமை அஞ்சலக கட்டட முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஜூன் 26-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் மூன்றாவது தளத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகாா்களைக் குறை தீா்க்கும் நாளில் நேரிலோ அல்லது முதுநிலை கண்காணிப்பாளா், சேலம்-636001 என்ற முகவரிக்கு ஜூன் 20 ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் உறையின் மேல் ஈஅஓ அஈஅகஅப இஅநஉ என்று எழுத வேண்டும். மணியாா்டா், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகாா்கள் எனில் அனுப்பிய தேதி, முழு விலாசம் (அனுப்புநா், பெறுநா்), பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயா் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகாா்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத் தொகையாளரின் பெயா், வசூலிக்கப்பட்ட விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்கலாம் என அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் கே.அருணாசலம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT