ஆட்டையாம்பட்டி எம்என்எஸ் அரசு மகளிா் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா பள்ளித் தலைமையாசிரியா் யோகேஸ்வரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மண்ணில் மங்காத பாலிதீன் பைகளின் தீமைகள் பற்றியும், மாணவிகளின் படிப்பு முறை பற்றியும் எடுத்துரைத்தாா். மேலும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் 10, பிளஸ் 2 வகுப்பு மாணவிகளுக்கு பாலிதீன் கவா் உபயோகப்படுத்தாமல் இருக்க வேண்டி துணிப் பையும், நோட்டும் வழங்கினா். சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆசிரியா்கள், மாணவிகள் உறுதிமொழியேற்று மரக்கன்றுகளை நட்டனா். தொடா்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில், மாவட்டக் கல்வி அலுவலா் சங்ககிரி (பொ) நாகராஜ், பள்ளி ஆய்வாளா் நடராஜ், சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலா் செல்வம், பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் நாகராஜ் , செயலாளா் அருள், சண்முகம், பழனிசாமி, சண்முகசுந்தரம், ராமலிங்கம், பெரியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.