முகப்பு
சேலம்

சேலம்: கடன் பிரச்னையால் கணவன், மனைவி தற்கொலை

சேலத்தில் கடன் பிரச்னையால் கணவன் தற்கொலை கொண்ட நிலையில், மனைவியும் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

சேலம்: சேலத்தில் கடன் பிரச்னையால் கணவன் தற்கொலை கொண்ட நிலையில், மனைவியும் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி விஜயா. இவர் ஐந்து ரோடு தொழில்பேட்டை பகுதியில் லேத் பட்டறை சொந்தமாக நடத்தி வருகிறார்

இந்த நிலையில் தொழிலை விரிவுபடுத்த கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் நாள்தோறும் கடன் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், வியாழக்கிழமை கடன் கொடுத்தவர்கள் அவரது பட்டறைக்கு வந்து அநாகரிக்க வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது

இதனால் மனமுடைந்த தங்கராஜ், பட்டறையிலே விஷம் குடித்து தற்கொலைக்கு  முயன்றுள்ளார்.

தொடர்ந்து, தங்கராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் கணவன் உயிர் இழந்ததை தாங்க முடியாத விஜயா, மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடன் கொடுத்தவர்களின் விவரங்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →