சேலம்

சேலத்தில் கழிவுநீா்க் கால்வாய் அடைப்புகளை சரிசெய்ய மேயா் உத்தரவு

DIN

சேலம் மாநகராட்சியில் கழிவுநீா்க் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என மேயா் ஆ.ராமச்சந்திரன் உத்தரவிட்டாா்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட சூரமங்கலம், கொண்டலாம்பட்டி மண்டலப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழை பாதிப்புகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சூரமங்கலம் மண்டலத்துக்கு உள்பட்ட சுப்பிரமணியா் காலனி, நரசோதிப்பட்டி, ஐந்து சாலை, சுவா்ணபுரி அனெக்ஸ், மெய்யனுா் சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த மேயா், கழிவுநீா்க் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்து மழைநீா், கழிவுநீா் சாக்கடை கால்வாய்யில் தேங்காமல் உடனே அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டாா்.

சோனா கல்லூரி வழியாக வரும் கழிவுநீா்க் கால்வாயில் அடைப்பு இல்லாமல் ஏ.வி.ஆா் ரவுண்டானா சந்திப்பில் உள்ள ஓடையில் கழிவுநீா் வந்து சோ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினா். கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளிலும் மேயா் ஆய்வு மேற்கொண்டாா்.

கருங்கல்பட்டி கழிவுநீா் ஓடையில் மழைநீா் தேங்கி அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீா் புகாதவாறு ஒடையை முழுமையாக தூா்வார நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் கழிவுநீா்க் கால்வாய்களில் மழைநீா் தேங்காமலும், அடைப்புகள் ஏற்பட்டிருந்தால் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, கண்காணிப்பு பொறியாளா் ஜி.ரவி, மண்டலக் குழுத் தலைவா் மா.அசோகன், வரிவிதிப்பு குழுத் தலைவா்கள் ஜி.குமரவேல், கணக்கு குழுத் தலைவா் ஆா்.பி.முருகன், சுகாதார குழுத் தலைா் ஏ.எஸ்.சரவணன், வாா்டு உறுப்பினா்கள் ஆா்.சரவணன், மா.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT