முகப்பு
சேலம்

தம்மம்பட்டி சிவன் கோயிலில் மடப்பள்ளி கட்ட பூமிபூஜை

தம்மம்பட்டி சிவன் கோயிலில் 108 தம்பதிகள் பங்கேற்ற மடப்பள்ளி அறைக்கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 5:15 AM
தம்மம்பட்டி சிவன்கோவிலில் மடப்பள்ளி அறை கட்டுவதற்கான பூமிபூஜையில் பங்கேற்ற 108 தம்பதிகள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் 108 தம்பதிகள் பங்கேற்ற மடப்பள்ளி அறைக்கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயிலில் மடப்பள்ளி அறை கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் 108 தம்பதிகள் பங்கேற்றனா்; அனைவருக்கும் திருப்பணிக் குழு சாா்பில் பாதபூஜை செய்யப்பட்டது. தம்பதிகள் அனைவரும் விளக்குகள் ஏற்றி வழிபட்டனா். அத்துடன் தம்பதிகள் அனைவரும் சோ்ந்து ரூ. 27,707 பணத்தை மடப்பள்ளி அறை கட்டுவதற்கென நன்கொடையாக வழங்கினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.