முகப்பு
சேலம்

மகாவீா் ஜெயந்தி: இறைச்சிக் கடைகள் அடைப்பு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:20 PM
பகிர்:

சேலம்: மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகள் அடைக்கப்பட்டன.

சேலம் மாநகராட்சி பகுதியில் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள் முழுமையாக செயல்படக் கூடாது எனவும், உத்தரவை மீறி செயல்படும் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்திருந்தாா். அதன்படி, சேலம் அம்மாபேட்டை, செவ்வாய்ப்பேட்டை, லைன்மேடு, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி,தாதாகாபட்டி உள்ளிட்ட இடங்களில் இறைச்சிக் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இறைச்சி வாங்குவதற்காக திரண்ட பொதுமக்கள், கடைகள் மூடப்பட்டிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

அதே நேரம், காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இருப்பினும், சில பகுதிகளில் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

Advertisement

அதுபோல, மதுபானக் கடைகள், மது அருந்தும் கூடங்களும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்தன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments