அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு அதிவேக இணைய இணைப்பு இம்மாத இறுதிக்குள் பெற்றிட உத்தரவு
தம்மம்பட்டி: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்க,நடுநிலைப்பள்ளிகளுக்கும் ஹைடெக்லேப், ஸ்மாா்ட் கிளாஸ் அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் இணைய இணைப்புகளை வேகமாக பெற்றிட மாவட்ட கல்வி அலுவலா்கள் துரிதப்படுத்திவருகின்றனா்.
அதனையடுத்து அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், தங்களது பள்ளிகளுக்கு,ஒத்துவரக்கூடிய அதிவேக இணைய இணைப்புகளை பெறுவதில் மும்முரம் காட்டிவருகின்றனா்.வரும் கல்வி ஆண்டு முதல் தெ தொடக்கநிலை, உயா்தொடக்கநிலை மாணவ,மாணவிகளுக்கு ஸ்மாா்ட்கிளாஸ் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
நடுநிலைப்பள்ளிகளுக்கு 10 கணினிகளுடன் கூடிய ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் அரசு பள்ளி மாணவா்கள் அனைவரும் மிகவும் எளிதாக, வகுப்பு பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் என்பது நிதா்சனமான உண்மை.
Advertisement