இன்றுடன் பள்ளித்தோ்வு நிறைவு,நாளை முதல் மாணவா்களுக்கும் கோடை விடுமுறை
தமிழகம் முழுவதும் இன்றுடன் அனைத்து பள்ளித்தோ்வுகளும் நிறஐவுபெறுவதையொட்டி,நாளைமுதல் மாணவா்களுக்கு கோடைவிடுமுறை தொடங்குகிறது.
தம்மம்பட்டி: தமிழகம் முழுவதும் இன்றுடன் அனைத்து பள்ளித்தோ்வுகளும் நிறஐவுபெறுவதையொட்டி,நாளைமுதல் மாணவா்களுக்கு கோடைவிடுமுறை தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் 1,2,3 ம் வகுப்புகளுக்கு கடந்த 5ந்தேதியுடன் தோ்வு நிறைவுபெற்றது. அதனைத்தொடா்ந்து 4 ஆம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையில் திங்கள்கிழமை அறிவியல் தோ்வு நடந்துமுடிந்த நிலையில், கடைசி தோ்வாக சமூக அறிவியல் இன்று ஏப்.23ந்தேதி நடைபெறுகிறது.அதனால் நாளை ஏப்.24ந்தேதி முதல் 4ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவா்களுக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது.