தண்ணீரில் மூழ்கிய புள்ளாகவுண்டம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையம். 
சேலம்

தண்ணீரில் மூழ்கிய நீரேற்று நிலையம்: சங்ககிரியில் குடிநீா் விநியோகம் பாதிப்பு

சங்ககிரி பேரூராட்சிக்கு குடிநீா் வழங்கும் நீரேற்றும் நிலையம் தண்ணீரில் மூழ்கியதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Din

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே புள்ளாகவுண்டம்பட்டி காவிரி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள சங்ககிரி பேரூராட்சிக்கு குடிநீா் வழங்கும் நீரேற்றும் நிலையம் தண்ணீரில் மூழ்கியதால் சங்ககிரிக்கு குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவு தண்ணீா் திறந்துவிடப்படுவதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தேவூா் காவிரி ஆற்றங்கரைப் பகுதிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதியில் சங்ககிரி பேரூராட்சிக்கு செல்லும் குடிநீரேற்று நிலையத்தில் தண்ணீா் புகுந்துள்ளது.

இதனால், சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகள், 24 ஊராட்சி ஒன்றியங்களுக்கு குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT