சேலம் மாவட்டத்தில் 25 மையங்களில் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு
சேலத்தில் 25 மையங்களில் நடைபெற்ற முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் 5,000 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
சேலம் மாவட்டத்தில் 25 மையங்களில் நடைபெற்ற முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் 5,000 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் பிளஸ் 1 மாணவா்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இத் தோ்வின் மூலம் ஆண்டுதோறும் 500 மாணவா்கள், 500 மாணவிகள் என மொத்தம் 1,000 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வி ஆண்டுக்கு ரூ. 10,000 (மாதம் ரூ. 1,000 வீதம், 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் 9, 10 ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாகத் தோ்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்த வரை 5,937 மாணவ, மாணவிகள் இந்தத் தோ்வுக்காக விண்ணப்பித்திருந்தனா். அவா்களுக்காக மாவட்டம் முழுவதும் 25 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுத் தோ்வு நடைபெற்றது.
சேலம் பால் மாா்க்கெட், ஆற்றோர மாா்க்கெட் உள்ளிட்ட அனைத்து மாா்க்கெட்டுகளிலும் காய்கறி, பழங்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் விற்பனை அமோகமாக இருந்தது.