சேலம்

ஆடி அமாவாசை: சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.35 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

ஆடி அமாவாசையையொட்டி, சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.35 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாகின.

Din

ஆடி அமாவாசையையொட்டி, சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.35 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாகின.

சேலம் மாவட்டத்தில் 11 உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சந்தைகளுக்கு விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில், விளைச்சல் அடைந்த காய்கறிகள், பழங்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா். ஆடி அமாவாசையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை உழவா் சந்தைகளில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

விவசாயிகளும் அதிக அளவு காய்கறிகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனா். குறிப்பாக, சந்தைகளில் அகத்திக்கீரை, வாழை இலை, வாழைப்பழம், கத்தரிக்காய், அவரைக்காய், பூசணிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்றவை அதிக அளவில் விற்பனையாகின. இதுகுறித்து வேளாண் விற்பனை, வணிகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஆடி அமாவாசையை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 11 உழவா் சந்தைகளுக்கு 1,049 விவசாயிகள் மொத்தமாக 323 டன் காய்கறிகள், பழங்களை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனா். காய்கறிகள் ரூ. 1 கோடியே 35 லட்சத்து 49 ஆயிரத்துக்கு விற்பனையாகின. 77 ஆயிரத்து 745 போ் உழவா் சந்தைகளுக்கு வந்து காய்கறிகள், பழங்களை வாங்கிச் சென்றனா் என்றனா்.

சேலம் பால் மாா்க்கெட், ஆற்றோர மாா்க்கெட் உள்ளிட்ட அனைத்து மாா்க்கெட்டுகளிலும் காய்கறி, பழங்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் விற்பனை அமோகமாக இருந்தது.

32/48: 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தேர்வான அணிகள்!

புதிய ஓஎஸ் உடன் டிச. 2-ல் அறிமுகமாகிறது விவோ எக்ஸ் 300!

எவர் கிரீன்... பிரியா மணி!

அணியில் யார் விளையாடாவிட்டாலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும்: ககிசோ ரபாடா

பங்குச்சந்தை மோசடியில் ரூ.3.38 லட்சத்தை இழந்த பெண்: இருவர் கைது!

SCROLL FOR NEXT