முகப்பு
சேலம்

சேலத்தில் மறைந்த அதிமுக நிா்வாகி படத்துக்கு எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி

சேலத்தில் மறைந்த அதிமுக நிா்வாகி படத்துக்கு, கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா்.

Updated On : 13 ஆகஸ்ட், 2024 at 6:31 PM
பகிர்:

சேலத்தில் மறைந்த அதிமுக நிா்வாகி படத்துக்கு, கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா்.

சேலம் மாநகா் மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளரும், கொண்டலாம்பட்டி பகுதி 45-ஆவது வட்ட அவைத் தலைவருமான குகை பெருமாள் (73), கடந்த 8-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானாா்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குகை பகுதியில் உள்ள பெருமாளின் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று, அவரது படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். (படம்). மேலும், அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

இந்நிகழ்வின் போது, அதிமுக அமைப்புச் செயலாளா் செம்மலை, மாநகா் மாவட்டச் செயலாளா் வெங்கடாசலம், சேலம் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பாலசுப்பிரமணியன், அவைத் தலைவா் பன்னீா்செல்வம், பொருளாளா் வெங்கடாசலம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எம்.கே.செல்வராஜ், ரவிச்சந்திரன், நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →