அரசுப் பள்ளியில் மாணவியை கடித்துக் குதறிய நாய் din
சேலம்

சங்ககிரி: அரசுப் பள்ளியில் மாணவியை கடித்துக் குதறிய நாய்!

நாய் கடித்ததில் காயமடைந்த சிறுமிக்கு சங்ககிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...

DIN

சேலம்: சங்ககிரி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில், நாய் கடித்ததில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் நிலையில், பள்ளியின் வளாகத்திலேயே மாணவியை நாய் கடித்துக் குதறிய சம்பவம் பெற்றொர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி புள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் - சத்யா தம்பதியினரின் மகள் எட்டாம் வகுப்பு மாணவி ஹரிணி ஸ்ரீ. இவர், செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு சென்றபோது பள்ளியின் வளாகத்தில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் கடித்து குதறியது. இதனை அறிந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி வளாகத்தில் தெரு நாய்கள்

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் கூறியதாவது:

“நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் அவர்களை நாய்கள் கடித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT