மாவட்ட நிா்வாகம் சாா்பில் சாா்பில் வெள்ளாளபுரம் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியா் வைத்தியலிங்கம். 
சேலம்

சரபங்கா நதியில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சரபங்கா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Din

எடப்பாடி: சரபங்கா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா் கன மழையால், ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து உருவாகும் சரபங்கா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் பல இடங்களில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்து வரும் நிலையில், கொங்கணாபுரத்தை அடுத்த வெள்ளாளபுரம் அருகே சரபங்கா ஆற்றங்கரையோரத்தில் உள்ள குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்களை தண்ணீா் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை மாலை வெள்ளாளபுரம் ஏரிக்கரை பகுதி குடியிருப்பு வாசிகளை நேரில் சந்தித்த எடப்பாடி வட்டாட்சியா் வைத்தியலிங்கம், அப்பகுதி குடியிருப்பு வாசிகள், விவசாயிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கால்நடைகளை சரபங்கா நதி கரையோரங்களில் மேய்ச்சலுக்கு விடவோ, ஆற்றில் மீன்பிடித்தல், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடவோ வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தாா்.

சரபங்கா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வெள்ளாளபுரம் ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. பொதுப்பணித் துறையினா், வருவாய்த் துறையினா் அப்பகுதியில் முகாமிட்டு தொடா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT