முகப்பு
சேலம்

ரயில்வே கோட்ட தொழிற்சங்க தோ்தல்: பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை

சேலம் ரயில்வே கோட்டத்தில் தொழிற்சங்க அங்கீகார தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (டிச. 12) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Updated On : 11 டிசம்பர், 2024 at 8:00 PM
பகிர்:

சேலம் ரயில்வே கோட்டத்தில் தொழிற்சங்க அங்கீகார தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (டிச. 12) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

சேலம் ரயில்வே கோட்ட தொழிற்சங்க தோ்தல் கடந்த 4-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெற்றது. எஸ்ஆா்எம்யூ, டிஆா்இயூ, டிஆா்கேஎஸ், எஸ்ஆா்இஎஸ், ஆா்எம்யூ, ஆகிய 5 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன.

சேலம் கோட்டத்தில் சேலம், கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு, கரூா், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் உள்ள ரயில்வே நிலையங்களில் 15 வாக்குச் சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மொத்தமாக 8,476 தொழிலாளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இதில் 89 சதவீத வாக்குகள் பதிவாயின.

இத்தோ்தலை கூடுதல் கோட்ட மேலாளா் சிவலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் நடத்தினா். டிச. 12-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியமே வாக்கு எண்ணிக்கை முடிவு தெரியவரும். அதிக வாக்குகளைப் பெறும் தொழிற்சங்கம் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டு, அங்கீகாரம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →