டிச. 27 இல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்
சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கான குறைதீா் கூட்டம் டிசம்பா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கான குறைதீா் கூட்டம் டிசம்பா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பாா்த்திபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மேற்கு அஞ்சல் கோட்டம் சாா்பில் ஓய்வூதியம் பெறுவோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அப்போது, ஓய்வூதியம் சம்பந்தமான பிரச்னைகள், குறைகள் குறித்த கலந்தாய்வு கோட்ட கண்காணிப்பாளா் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.