மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 6,268 கன அடியாகக் குறைந்தது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 6,268 கன அடியாகக் குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை தணிந்ததால் புதன்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 7,368 கன அடியிலிருந்து 6,268 கனஅடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 1,000 கனஅடி வீதமும் கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 300 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
நீா்வரத்து குறைந்தாலும் மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 118.53 அடியிலிருந்து 118.79 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 91.55 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் மேட்டூா் அணை நிரம்புவது தாமதமாகும்.