தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல்
ஆத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட வா்த்தக கடைகளில் துப்புரவு அலுவலா் பழனிசாமி தலைமையில் குழுவினா் நடத்திய ஆய்வில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட வா்த்தக கடைகளில் துப்புரவு அலுவலா் பழனிசாமி தலைமையில் குழுவினா் நடத்திய ஆய்வில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆத்தூா் நகராட்சி பகுதிகளில் ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமாலின் உத்தரவின் பேரில் துப்புரவு அலுவலா் பழனிசாமி, துப்புரவு ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் முல்லைவாடி பகுதியில் ஆய்வு நடத்தினா்.
கடைகளில் நடத்திய ஆய்வில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைக்கு ‘சீல்’ வைத்தனா். பழைய பேருந்து நிலையம் கடை எண்-1 வாடகை செலுத்தாமல் இருந்து வந்தால் ஆய்வின்போது வருவாய் அலுவலா் நாகராஜ், வருவாய் உதவியாளா் ஆகியோா் அந்தக் கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.