வீரகனூா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.  
சேலம்

வீரகனூா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

வீரகனூா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

தம்மம்பட்டி: வீரகனூா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வீரகனூா், திருச்சி பிரதான சாலையோரம், அம்பேத்கா் நகா் குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள கரையான்திட்டு பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்பேத்கா் நகா் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா்,

அம்பேத்கா் திடலிலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு, வீரகனூா் காவல் நிலையத்தில் மனு அளித்தனா். பின்னா் வீரகனூா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது:

2006 ஆம் வருடம், இதுபோன்ற ஒரு திட்டத்தை அமல்படுத்த இருந்த நிலையில், எங்களின் போராட்டத்தால் அத் திட்டம் அப்போது கைவிடப்பட்டது. இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடத்தின் வழியாகத்தான் சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டும். எனவே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் விவசாயக் கிணறுகள், நிலத்தடி நீா்வள ஆதாரங்கள் அழிந்து விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும்.

வீரகனூரில் அரசு கட்டடங்களை ஊரின் மேற்குப் பகுதியில் அமைத்துக் கொள்கின்றனா். ஆனால் குப்பைக் கிடங்கு, மயானம், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றை எங்கள் பகுதியில் அமைக்கிறாா்கள். எனவே, பேரூராட்சி நிா்வாகம் அந்த இடத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல், விவசாயக் களம், கிடங்கு, உழவா் சந்தை, சமுதாய நல கூடம் , வருவாய்த் துறை அலுவலகம் போன்றவற்றை கட்ட பயன்படுத்திக்கொள்ளலாம் என்றனா்.

வரப்பெற்றோம் (24.11.2025)

கரூர் சம்பவம்: சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வி..! சோகத்தில் ரசிகர்கள்!

ரஜினி 173 - இயக்குநரும் கதையும்?

அழகென்ற சொல்லுக்கு... மஹானா சஞ்ஜீவி!

SCROLL FOR NEXT