முகப்பு
கோப்புப்படம்
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 1 அடி குறைந்துள்ளது.

சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 1 அடி குறைந்துள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:41 PM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 1 அடி குறைந்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி கருகும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற நேற்று முன் தினம் மாலை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில் வினாடிக்கு 6, 600 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 5,600 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இன்று காலை அணையிலிருந்து வினாடிக்கு 5,600 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் காலை 70.42  அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 69.42 அடியாக குறைந்தது. கடந்த இரண்டு நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1 அடி குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 86 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 32.20 டி .எம்.சியாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →