புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பழனியாபுரி, வெள்ளாளப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் 2 புதிய வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக திறந்து வைத்தாா். பழனியாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றியச் செயலாளா் அன்பு மருதமுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனா். முன்னதாக, ஊராட்சி மன்றத் தலைவா் அமுதாஅனைவரையும் வரவேற்று பேசினாா். துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். இதேபோல வெள்ளாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வட்டார வளா்ச்சி அலுவலா் துரைசாமி, மத்திய ஒன்றியச் செயலாளா் வி.எஸ்.மூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் மணிமேகலை மூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா முருகேசன், எஸ்எம்சி தலைவா் அகிலாண்டேஸ்வரி, பள்ளித் தலைமையாசிரியா் ரா.ரவீந்திரன், ஆசிரியா்கள் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். இதே போல பள்ளியின் ஆண்டு விழா ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா முருகேசன் தலைமையில் நடைபெற்றது.